/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எலுமிச்சை மேலாண்மை பயிற்சி;இடுபொருட்கள் வழங்கும் விழா
/
எலுமிச்சை மேலாண்மை பயிற்சி;இடுபொருட்கள் வழங்கும் விழா
எலுமிச்சை மேலாண்மை பயிற்சி;இடுபொருட்கள் வழங்கும் விழா
எலுமிச்சை மேலாண்மை பயிற்சி;இடுபொருட்கள் வழங்கும் விழா
ADDED : நவ 27, 2024 08:59 PM

குன்னுார்; குன்னுார் காமராஜபுரம் கிராமத்தில், பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு, எலுமிச்சை பயிர் மேலாண்மை பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக தோட்டகலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்; டில்லி பழ அறிவியல் துறை தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமம்; அகில இந்திய ஒருங்கிணைந்த பழ பயிர்கள் ஆராய்ச்சி திட்டம் சார்பில் விழா நடந்தது. அதில், பழ அறிவியல் துறை தலைவர் முனைவர் அக்சிலியா, எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.
குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, பழ அறிவியல் துறை விஞ்ஞானிகள் குறித்தும், இந்திரா, எலுமிச்சை சாகுபடியில் நோய் மேலாண்மை குறித்தும் பேசினர். பயிர் வினை இயல் துறை உதவி பேராசிரியர் வனிதா, எலுமிச்சை சாகுபடியில் இயற்கை உரங்களின் பங்கு பற்றி பேசினர்.
தொடர்ந்து சிறு விவசாயிகளுக்கு, 'இடுபொருட்களான எலுமிச்சை நாற்று; நிழல் வலைகள்; பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம்பூஞ்சை போன்ற உயிர் உரங்கள்; டிரைகோடர்மா, பேசில்லஸ் போன்ற பூஞ்சான மற்றும் பாக்டீரியா கொல்லி; வேர்களை பாதுகாக்கும் வேப்பம் புண்ணாக்கு,' உட்பட இயற்கை வழி உற்பத்தி இடுபொருட்கள், 25 சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.