/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ப்பு நாயை கடித்து குதறிய சிறுத்தை
/
வளர்ப்பு நாயை கடித்து குதறிய சிறுத்தை
ADDED : பிப் 10, 2025 10:29 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திக்குன்னா தனியார் தோட்டத்தை ஒட்டி கே.கே.நகர்., அமைந்துள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று குட்டியுடன், உலா வருவதை தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பார்த்துள்ளனர்.
இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்துச் செல்ல வலியுறுத்தி வந்த நிலையில், இரவு இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி என்பவரின் வீட்டு வாசலில் கட்டியிருந்த வளர்ப்பு நாயை கடித்து குதறி உள்ளது. நாய் கட்டி இருந்ததால் அதன் உடலை எடுத்து செல்ல முடியாத நிலையில் சிறுத்தை அப்படியே விட்டு சென்றது. இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வனச்சரக்கர் சஞ்சீவி, வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், குடியிருப்பு வாசிகள் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வளர்ப்பு கோழிகள் மற்றும் நாய்களை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்வதை தவிர்க்கவும் வேண்டும்,' என்றனர்.

