/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை தாக்கி ஆடு பலி; அச்சத்தில் கிராம மக்கள்
/
சிறுத்தை தாக்கி ஆடு பலி; அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : டிச 17, 2024 09:38 PM
கூடலுார்; கூடலுார் அருகே சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்தது.
கூடலுார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த விமலா ஆடு வளர்த்து வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ஐந்து ஆடுகளை, ஆட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
இரவு அப்பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, கொட்டகையை சேதப்படுத்தி, பெண் ஆட்டை கொன்று, சிறிது துாரம் இழுத்து சென்று உட்கொண்டுள்ளது.
நேற்று, காலை வானவர் வீரமணி, வனக்காப்பாளர் மாரசாமி ஆட்டின் உடலை ஆய்வு செய்தனர். 'உரிய இழப்பீடு வழங்கப்படும்' என, தெரிவித்தனர். இச்சம்பத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், 'ஆட்டை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து முதுமலையில் விட வேண்டும்,' என்றனர்.