/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதியில் மரத்தில் முகாமிட்ட சிறுத்தை
/
குடியிருப்பு பகுதியில் மரத்தில் முகாமிட்ட சிறுத்தை
குடியிருப்பு பகுதியில் மரத்தில் முகாமிட்ட சிறுத்தை
குடியிருப்பு பகுதியில் மரத்தில் முகாமிட்ட சிறுத்தை
ADDED : டிச 09, 2025 06:18 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேலக்குன்னா பகுதி குடியிருப்புகளுக்கு மத்தியில், மரத்தில் முகாமிட்ட சிறுத்தையால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேலக்குன்னா பொன்னம்மா பள்ளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில், நேற்று காலை சிறுத்தை ஒன்று மரத்தில் ஏறி முகாமிட்டது. இதனை ஒட்டி சாலை அமைந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்களை பார்த்த சிறுத்தை சப்தம் எழுப்பி உள்ளது. அதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள், அங்கு வந்து சப்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டி உள்ளனர். எனினும் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில், சிறுத்தை முகாமிட்டு இருந்தது, இப்பகுதி மக்களை அச்சமடைய செய்து உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

