/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை மின் கம்பத்தில் ஏறி 'ஷாக்கில்' பலி
/
கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை மின் கம்பத்தில் ஏறி 'ஷாக்கில்' பலி
கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை மின் கம்பத்தில் ஏறி 'ஷாக்கில்' பலி
கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை மின் கம்பத்தில் ஏறி 'ஷாக்கில்' பலி
ADDED : ஜூலை 18, 2025 09:05 PM

குன்னுார்; குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில், கரடிகளுடன் சண்டையிட்டு, மின்கம்பத்தில் ஏறிய, பெண் சிறுத்தை ஷாக் அடித்து பரிதாபமாக பலியானது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் வண்டிச்சோலை பாரஸ்ட்டேல் சாலை, ரோஸ்வேலி தனியார் தேயிலை தொழிற்சாலை அருகே, சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து, தொழிற்சாலை நிர்வாகிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நீலகிரி உதவி வன பாதுகாவலர் மணிமாறன், குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உட்பட வனத்துறையினர், மின்வாரியத்தினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்து எரியூட்டினர்.
வனத்துறையினர் கூறுகையில், (நேற்று முன்தினம்) இரவு, 10:00 மணியளவில் தேயிலை தொழிற்சாலை அருகே இரு கரடிகள் சிறுத்தையுடன் சண்டையிட்டதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இரண்டு வயதுடைய பெண் சிறுத்தை அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறியதால் ஷாக் அடித்து விழுந்து இறந்துள்ளது. மற்ற விவரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தெரியவரும்,'என்றனர்.