தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டெருமை கன்றை வேட்டையாடிய சிறுத்தை

 காட்டெருமை கன்றை வேட்டையாடிய சிறுத்தை

 காட்டெருமை கன்றை வேட்டையாடிய சிறுத்தை


ADDED : ஏப் 09, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் நான்சச் எஸ்டேட்டில், சிறுத்தை ஒன்று காட்டெருமை கன்றை கொன்று மரத்தில் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குன்னுார் உலிக்கல் ட்ரூக் நான்சச் எஸ்டேட் பகுதியில், காட்டெருமை கன்று இறந்த நிலையில், சில்வர் ஓக் மரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷசாங் உத்தரவின் பேரில், வனச்சரகர் ரவீந்திரநாத் மேற்பார்வையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுத்தை தனது உணவு தேவைக்காக கன்றை கொன்று மரத்தின் மேல் உடலை வைத்து சென்றது தெரிய வந்தது. மீண்டும் சிறுத்தை உணவிற்காக அங்கு வரும் என்பதால் அதே இடத்தில் உடல் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us