/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்
/
பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்
பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்
பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : ஜூன் 04, 2025 08:22 PM
கோத்தகிரி; கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக, சிறுத்தை உட்பட, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இரவு நேரத்தில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருகிறது. அங்கு பொருத்தப்பட்டுள்ள, சி.சி.டி.வி., கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி வைரலாகி வருகிறது. மக்கள் கூறுகையில், 'ஒரே இடத்தில், பல நாட்களாக நடமாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர். அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.