/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை; புதர்களை அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஆக 29, 2025 09:11 PM

கூடலுார்; கூடலுார் கோழிக்கோடு சாலையை ஒட்டிய, பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்ததை தொடர்ந்து, சாலையோரத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றும் பணியில் டான்டீ தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் (டான்டீ) இரும்புபாலம் முதல், பாண்டியார் குடோன் வரை கோழிக்கோடு சாலையை ஒட்டி உள்ளது.
அதில், இரும்புபாலம் முதல் மரப்பாலம் வரை, சாலையோரம் தேயிலை தோட்டத்தை ஒட்டி, புதர் செடிகள் வளர்ந்துள்ளன.
இங்குள்ள பால்மேடு டான்டீ தேயிலை தோட்டத்தில், சிறுத்தை உலா வந்ததை, கேரளா சுற்றுலா பயணிகள் பார்த்து அதனை 'வீடியோ' எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
இதை தொடர்ந்து, இரும்புபாலம் முதல் மரப்பாலம் வரை, டான்டீ தேயிலை தோட்டத்தை ஒட்டி, சாலையோரம் உள்ள செடிகளை அகற்றி சீரமைக்கும் பணியில், டான்டீ தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.