ADDED : நவ 13, 2026 06:24 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியில் இரும்பு பாலம் கிராமம் அமைந்துள்ளது.
இங்குள்ள குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தோட்டத்தின் வேலியில் சிக்கிய சிறுத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனத்துறையால் பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
தற்போது, இதே பகுதியில் இன்று (நவ.,13) அதிகாலை, 4:00- மணிக்கு சிறுத்தை நடந்து செல்வது, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
