தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாலக்காட்டில் கூண்டில் சிக்கிய சிறுத்தை

பாலக்காட்டில் கூண்டில் சிக்கிய சிறுத்தை

பாலக்காட்டில் கூண்டில் சிக்கிய சிறுத்தை


ADDED : செப் 14, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு அருகே, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தையை மீட்டு வனத்தில் விடப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்​கொல்லங்கோடு அடுத்த மாத்தூர் பகுதியில் சமீபமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை அங்குள்ள வளர்ப்பு நாய், ஆடு, மாடு, கோழிகளை கவ்வி செல்கிறது. பீதியடைந்த அப்பகுதி மக்கள், கொல்லங்கோடு வனத்துறையிடம் புகார் அளித்தனர்.

வனத்துறையினர், அங்கு தனியாருக்குச்சொந்தமான தோப்பில் கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர்.

நேற்று அதிகாலை, கூண்டில் சிறுத்தை சிக்கியது. தகவலறிந்து கொல்லங்கோடு சரக அதிகாரி அனூபின் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கு திரண்ட மக்கள், ‘பிடிபட்ட சிறுத்தையை மீண்டும் காட்டுக்குள் விடாமல், உயிரியல் பூங்காவிற்கு மாற்ற வேண்டும்,’ என. வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், பிடிபட்ட இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுத்தை, முழு ஆரோக்கியத்துடன் இருப்பதை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், மக்களின் கோரிக்கையை நிராகரித்தனர். பின்னர், அதிகாலையில் சிறுத்தையை பரம்பிக்குளம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us