ADDED : நவ 22, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் நகர பகுதியில், காட்டெருமை, கரடி வருகையை போல. தற்போது சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் குன்னுார் உபாசி வளாகத்திற்குள் சிறுத்தை 'விசிட்' செய்த நிலையில், டானிங்டன் பிரிட்ஜ் அம்பேத்கர் நகர் பகுதியில், நேற்று காலை நாயை வேட்டையாடி புதர் செடிகளுக்குள் விட்டு சென்றுள்ளது. மீண்டும் இப்பகுதிக்கு வரும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

