ADDED : ஜூன் 20, 2025 06:27 AM

அ நிறம் | அளவு
பந்தலுார்: கல்வித்துறை சார்பில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு, தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில், 'கற்போம் எழுதுவோம்' எனும் தலைப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் மாலை நேரத்தில் கற்று தரப்பட்டது.
இதன் தேர்வு நேற்று முன்தினம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டது. அதில், பந்தலுார் அருகே மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த தேர்வில், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர் அஷ்ரப், தன்னார்வலர் மும்தாஜ், பயிற்சியாளர் அகலா ஆகியோர் பங்கேற்றனர்.
