/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமையை மீட்போம் :விழிப்புணர்வு பயணம்
/
பசுமையை மீட்போம் :விழிப்புணர்வு பயணம்
ADDED : நவ 09, 2025 10:10 PM
குன்னுார்: குன்னுாரில் 'பசுமையை மீட்போம்; பூமியை காப்போம்' என்ற விழிப்புணர்வு பசுமை பயணம் நடந்தது.
தமிழக துறவற சபையினர் சார்பில், 'பசுமையை மீட்போம்; பூமியை காப்போம்' என்ற விழிப்புணர்வு பசுமை பயணம் கன்னியாகுமரியில் கடந்த, 5ல் துவங்கியது. ஊட்டி மறை மாவட்ட துறவற சபைகளின் கூட்டமைப்பு சார்பில், இந்த பசுமை பயணம் குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சிம்ஸ் பார்க் வரை நடந்தது.
ஊட்டி மறை மாவட்ட துறவற சபை தலைவர் அருட் சகோதரி அமலி தலைமை வகித்தார். குன்னுார் வட்டார முதன்மை குரு அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 'பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கையை பாதுகாப்போம்,' என்பன, உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான நாடகம், நடனம் நடந்தது.

