தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காடுகளை காப்பாற்றுவோம்... 'இன்று உலக மழை காடுகள் தினம்'

 காடுகளை காப்பாற்றுவோம்... 'இன்று உலக மழை காடுகள் தினம்'

 காடுகளை காப்பாற்றுவோம்... 'இன்று உலக மழை காடுகள் தினம்'

1


ADDED : ஜூன் 22, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 05:09 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலூர்: மழை காடுகளை காப்பாற்றினால் மட்டுமே, எதிர்கால சமுதாயம் நலமாக வாழ முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ம் தேதி, உலக மழைக்காடுகள் தினம்கொண்டாடப்பட்டு வருகிறது. 2017 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த தினம், மழைக்காடுகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது மழைக்காடுகளின் பங்களிப்பு குறித்து, உணர்த்துவதாகும்.

மழைக்காடுகளை காப்பாற்றுவதன் வாயிலாக புவி வெப்பமயமாதலை தடுக்கவும், கார்பனை சேமிக்கவும் துணை நிற்கும். மேலும் தாவரங்கள், விலங்கினங்களை பாதுகாக்கவும், மழை பொழிவை சீராக வைப்பதற்கும் காடுகள் உதவுகிறது.

ஒவ்வொரு நாளும், ஏதேனும் காரணத்தை முன்வைத்து மரக்கன்றுகளை நடவு செய்தாலும், அவற்றை பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்டாததால் அதனால் எந்த பயனும் கிடைப்பதில்லை.

காடுகளை அழித்து கட்டடக்காடுகளாக மாற்றுவதாலும், விவசாய நிலங்களாக உருவாக்குவதாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கால நிலையிலும் மாற்றம் உருவாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க மழை காடுகளை பாதுகாக்கவும், எதிர்கால சமுதாயம் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தவும் அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்பது அவசியமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us