பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : மார் 02, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கூடலூர்: - மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடலூர், ஸ்ரீமதுரை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திக் துவக்கி வைத்து, பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, குழந்தை திருமணம் தடுப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து நடந்த தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் , 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தை திருமணம் தடுப்பு' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
