நுாலக கட்டட திறப்பு விழா தளவாட பொருட்கள் வழங்கல்
நுாலக கட்டட திறப்பு விழா தளவாட பொருட்கள் வழங்கல்
ADDED : மார் 17, 2026 06:29 AM
கோத்தகிரி: கோத்தகிரி நெடுகுளா கிராமத்தில் புதிய நுாலக கட்டட திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் கிளமென்ட் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி கட்டடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, நெடுகுளா ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள் சார்பில், புத்தகங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, 7,000 ரூபாய் மதிப்பிலான பீரோ நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதே போல, சேலக்கொரை கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்களும், 7,000 ரூபாய் மதிப்பிலான அலுவலக மேசை வழங்கினர்.
மேலும், சேலக்கொரை ஆசிரியர் பாபு, 2,000 ரூபாய் மதிப்பில் சரஸ்வதி படம் வழங்கினார். பூபேஷ் பெள்ளி, கவுசிக், கனிஷ்க், பெள்ளி, கமல் ராமலிங்கம் மற்றும் விஜயகுமார் ஆகியோர், தலா, 1,000 ரூபாய் செலுத்தி தங்களை புரவலர்களாக நுாலகத்தில் இணைத்து கொண்டனர். நுாலகர் ரமேஷ் நன்றி கூறினார்.
