வாரிசுகளுக்கு எல்.ஐ.சி.,யில் வேலை முகவர்கள் கூட்டத்தில் எதிர்பார்ப்பு
வாரிசுகளுக்கு எல்.ஐ.சி.,யில் வேலை முகவர்கள் கூட்டத்தில் எதிர்பார்ப்பு
UPDATED : அக் 20, 2026 05:40 PM
ADDED : அக் 20, 2026 05:36 PM

கூடலுார்:
‘கூடலுாரில் நடந்த எல்.ஐ.சி., முகவர்கள் கூட்டத்தில், வாரிசுகளுக்கு எல்.ஐ.சி.,யில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலுார் வியாபாரிகள் சங்க கட்டடத்தில், எல்.ஐ.சி., முகவர்கள் சங்க பேரவை கூட்டம் நடந்தது. சங்க துணை செயலாளர் பாலு வரவேற்றார். கிளை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
கூடலுார் செயல் தலைவர் மோகன், முன்னாள் தலைவர் ஜார்ஜ், ஊட்டி கிளை தலைவர் தர்மன், குன்னுார் செயலாளர் குணசேகரன் பேசினார்.
கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ‘வன விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முகவர்கள் அனைவரும் மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும். முகவர்களின் வாரிசுகளுக்கு எல்.ஐ.சி.,யில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஏஜென்ட் கமிஷனை குறைக்க கூடாது. கமிஷன் மீது ஜிஎஸ்டி கூடாது’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் முசாப், பொருளாளர் அபூபக்கர், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணை செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
