sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விதை விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து! மண்டல ஆய்வு மைய துணை இயக்குனர் எச்சரிக்கை

/

விதை விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து! மண்டல ஆய்வு மைய துணை இயக்குனர் எச்சரிக்கை

விதை விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து! மண்டல ஆய்வு மைய துணை இயக்குனர் எச்சரிக்கை

விதை விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து! மண்டல ஆய்வு மைய துணை இயக்குனர் எச்சரிக்கை


ADDED : ஜூலை 15, 2025 08:16 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'நீலகிரியில் விதை விற்பனை கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மலை காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர், முள்ளங்கி உட்பட பல்வேறு மலை காய்கறிகள் மற்றும் வெள்ளை பூண்டு அதிகளவு பயிரிடப்படுகிறது.

தற்போது சரியான விலை இல்லாத காரணத்தால் மலை காய்கறிகளுக்கு மாற்றாக சைனீஸ் வகை காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தரமானதாகவும், ருசியாகவும் இருப்பதால் விற்பனை அதிகமாக இருக்கும். 'விதைகள் தரமாக இருந்தால் மட்டுமே நல்ல விளைச்சல் பெற முடியும் என்பதால் விவசாயிகள் கட்டாயமாக விதை பரிசோதனைக்கு பின்தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என, வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தும் வகையில், விதை விற்பனை செய்யும் கடைகளில் விதை ஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:


நீலகிரியில் 'காரிப்பருவம்' தொடங்கியுள்ளதால், விவசாயிகள் அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறி பயிர் செய்ய துவங்கி உள்ளனர். சில பகுதிகளில் விதைகள் தரமில்லாததால் விதைப்பு பணி மேற்கொள்ளும் விவசாயிகள் நஷ்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீப காலமாக பல விவசாயிகள் போலி விதைகளால் பாதிக்கப்பட்டு, விவசாயத்தை விட்டு வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இதனால்,' விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதி மீறல்களை தடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீப காலமாக, நீலகிரியில் அடிக்கடி நடக்கும் விதை ஆய்வுகளால், போலி விதைகள் தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகள் விதைப்பு பணி மேற்கொள்வதற்கு முன்பு முக்கியாக நடப்பு பருவத்திற்கு ஏற்ற காய்கறிகளின் ரகங்கள், விதையளவு மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து தகவல்களை வட்டார தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல விதை ஆய்வு மைய துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், ''நீலகிரியில் தற்பொழுது 'காரிப்பருவம்' உள்ளதால் விவசாயிகள் மலைக்காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் பணிகளை தொடங்கி விட்டனர்.

இந்த நேரத்தில், மலைகாய்கறி விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும். விதைகள் வாங்கும்போது அதிகபட்ச விற்பனை விலை, விற்பனை ரசீது, முளைப்புச்சான்று, காலாவதி நாள், ஸ்கேன் குறியீடு, குவியல் எண், ஏற்ற விதைப்பு பருவம் உள்ளிட்ட தகவல்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

விதை விற்பனை செய்யும் கடைகளில் கட்டாயம் இருப்பு பலகை மற்றும் விலை பலகைகளை விவசாயிகள் பார்வைக்குபடும் படி வைக்க வேண்டும்.

திடீர் குழு ஆய்வுகள் நடத்தப்பட்டு விதை விற்பனையில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் விதை உரிமம் ரத்து உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி விதைகள் குறித்து அறிந்தால் விவசாயிகள் புகார் செய்யலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us