/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது விற்பனை: மூவர் மீது வழக்கு பதிவு
/
மது விற்பனை: மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 18, 2024 11:02 AM
குன்னுார : குன்னுார் அருவங்காட்டில் விதிமீறி மது வகைகள் விற்பனை செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குன்னுார் அருவங்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் திருவள்ளுவர் தின விடுமுறையையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
எனினும் இந்த பகுதிகளில் அனுமதியின்றி மது வகைகள் விற்பனை செய்வது தொடர்பாக போலீசார் ரகசிய ஆய்வு நடத்தினர்.
அதில், டாஸ்மாக் அருகே மது வகைகளை விற்பனை செய்த, கரியாகவுடர்லைன் பகுதியை சேர்ந்த மது, 49, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, 10 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது விற்பனை செய்தது தொடர்பாக காணிக்கராஜ் பகுதியை சேர்ந்த டென்னிஸ், 30, சந்தோஷ், 29 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரிடம் இருந்து மொத்தம், 14 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.