/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளி நபர்களுக்கு மது விற்பனை: மசினகுடியில் மதுபான கூடத்துக்கு 'சீல்'
/
வெளி நபர்களுக்கு மது விற்பனை: மசினகுடியில் மதுபான கூடத்துக்கு 'சீல்'
வெளி நபர்களுக்கு மது விற்பனை: மசினகுடியில் மதுபான கூடத்துக்கு 'சீல்'
வெளி நபர்களுக்கு மது விற்பனை: மசினகுடியில் மதுபான கூடத்துக்கு 'சீல்'
ADDED : மார் 14, 2024 11:22 PM
ஊட்டி;ஊட்டி மசினகுடி பகுதியில் மதுபான கூடத்தில், வெளி நபர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதால், 'சீல்' வைக்கப்பட்டது.
ஊட்டி மசினகுடி பகுதியில் செயல்பட்டு வரும் சில மதுபான விற்பனை கூடங்களில், வெளி நபர்களுக்கு 'சில்லிங்' மது விற்பனை செய்யப்படுகிறது. அங்கு மது அருந்திவிட்டு, வனப்பகுதியில் வீசப்படும் காலி பாட்டில்களால், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புகாரின்படி, மசினகுடி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்களில் திடீர் தணிக்கை நடத்தி, விதிமுறை மீறல்கள் இருப்பின் மதுக்கூடங்களுக்கு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் (ஆயம்) அறிவுரைப்படி துறை அலுவலர்கள் இரவில் ஆய்வு செய்தபோது, 'ரைசிங் சன்' என்ற விடுதியின் மதுக்கூடம் மூலம், விதிமுறைகள் மீறி வெளி நபர்களுக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, விதிமுறை மீறி மது விற்பனை செய்த, மதுபான கூடம் மற்றும் மது இருப்பு அறை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவு படி 'சீல்' வைக்கப்பட்டது.
கலெக்டர் அருணா கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மது கூடங்களில், சில்லறையாக வெளி நபர்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த மதுபான கூடங்கள், சென்னை ஐ கோர்ட் உத்தரவு படி, 'சீல்' வைக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட மதுபான கூட உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

