/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அக்., 2ல் மதுக்கடைகள் இயங்காது மீறினால் சட்டபடி நடவடிக்கை
/
அக்., 2ல் மதுக்கடைகள் இயங்காது மீறினால் சட்டபடி நடவடிக்கை
அக்., 2ல் மதுக்கடைகள் இயங்காது மீறினால் சட்டபடி நடவடிக்கை
அக்., 2ல் மதுக்கடைகள் இயங்காது மீறினால் சட்டபடி நடவடிக்கை
ADDED : செப் 30, 2024 04:36 AM
கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் அக்., 2ல் மதுக்கடைகள் இயங்காது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஓட்டல் பார்களில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அக்., 2ம் தேதி மது வகைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது. டாஸ்மாக் கடைகள் உட்பட, அனைத்து பார்களும் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி, எவரேனும் மது வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட நாளில் கடைகளை திறந்து மது விற்பனை செய்வது தெரிய வந்தால், ஊட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கம் ஏ.டி.எஸ்.பி., அலுவலகம் 0423-2223802, உதவி ஆணையர் (ஆயம்) 0423 -2443693, குன்னுார் எடப்பள்ளி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் 0423-2234211என்ற எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.