/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்
/
தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்
ADDED : ஏப் 29, 2025 09:03 PM
ஊட்டி; 'தொழிலாளர் தினமான மே, 1ம் தேதி மதுக்கடைகள் செயல்படாது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள், தொழிலாளர் தினமான மே, 1ம் தேதி எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.
குறிப்பிட்டநாளில், கட்டாயமாக, டாஸ்மாக் சில்லறை மது விற்பனை கடைகள், கிளப்கள் , ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்படும். உத்தரவை மீறி எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமதாரர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்-1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, குறிப்பிட்ட நாளில் பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், அந்த விபரத்தை, ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்கல்) 0423 -2223802, உதவி ஆணையர் (ஆயம்) 0423--2443693, குன்னுார் எடப்பள்ளி டாஸ்மாக் மேலாளர், 0423- -2234211 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.