/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கால்நடைகள் உலா; வாகனங்கள் இயக்க சிரமம்
/
சாலையில் கால்நடைகள் உலா; வாகனங்கள் இயக்க சிரமம்
ADDED : ஜூலை 25, 2025 08:33 PM
குன்னுார்; குன்னுார் பந்துமை சாலையில், உலா வரும் வளர்ப்பு எருமைகளால், வாகனங்களை ஓட்டி செல்வோர் சிரமப்படுகின்றனர்.
குன்னுார் நகர பகுதிகள் மற்றும் சாலையில் கால்நடைகள் உலா வருகிறது. மார்க்கெட் பகுதிகளில் உணவு கழிவுகளுக்காக கால்நடைகள் வருவதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
இதேபோல, குன்னுார் பந்துமை சாலையில் அவ் வப்போது வரும் வளர்ப்பு எருமைகள் சாலையில் கூட்டமாக செல்கின்றன. அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் அவற்றிற்கு இடையே அச்சத்துடன் செல்கின்றனர். வளைவு பகுதிகளில் இவை செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சாலையில் கால்நடைகளை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.