/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'குடிநீர் சேமிப்புக்கு மக்கள் ஒத்துழைக்கணும்' உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தல்

ADDED : மார் 18, 2024 12:26 AM
ஊட்டி:'கோடையை கடந்து செல்ல குடிநீர் சேமிப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்தாண்டு பருவமழை பொய்த்தது. அணைகள், தடுப்பணைகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. கோடைகாலம் துவங்கியதால் கடும் வறட்சி நிலவுகிறது.
தற்போது, ஊட்டி, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் நகராட்சி பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து பகுதிகளிலும் விடுத்துள்ள அறிவுரைகள்:
கிராமப்பகுதி, நகர் பகுதிகளில் தண்ணீரை விரயமாக்க கூடாது; சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; குடிநீரில் வாகனங்கள் கழுவ கூடாது; பொது குழாய் தண்ணீரை விரயமாக்கினால் அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும்; குடிநீர் பஞ்சம் ஏற்படும் கிராமங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கை மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்டேஜ், சொகுசு விடுதிகளுக்கு திருட்டுதனமாக தண்ணீர் கொடுப்பது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.