/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறக்குமதி குறுமிளகால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்பு
/
இறக்குமதி குறுமிளகால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்பு
ADDED : மார் 05, 2024 12:40 AM

பந்தலுார்:இலங்கையிலிருந்து குறுமிளகு இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், கூடலுாரில் குறுமிளகு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நம் நாட்டில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மலை பிரதேசங்களில் குறுமிளகு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விளைச்சல் தரும் குறுமிளகு, கிலோ,1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து படிப்படியாக குறைந்து, 700 ரூபாய்க்கு ஒரு கிலோ குறுமிளகு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது இறக்குமதி அதிகரித்து வருவதால், விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ குறுமிளகு, 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், அறுவடை செய்து உலர வைக்க கூட தொழிலாளர்கள் கிடைக்காமல்; கூலி கொடுக்க முடியாமல் குறுமிளகு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
குறுமிளகு விவசாயி ஜோஸ்குரியன் கூறுகையில், ''இந்தியாவில் அதிக அளவு குறுமிளகு விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் குறுமிளகிற்கு அரசு, 700 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே, விவசாயிகள் பிழைக்க முடியும்,'' என்றார்.

