/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உள்ளாட்சிகள் தினம்; நாளை கிராம சபை கூட்டம்
/
உள்ளாட்சிகள் தினம்; நாளை கிராம சபை கூட்டம்
ADDED : அக் 30, 2025 10:39 PM
ஊட்டி:  நீலகிரியில் உள்ளாட்சிகள் தினமான நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள நீலகிரி  கலெக்டர் லட்சுமி பவ்யா அழைப்பு விடுத்துள்ளார்.
கிராம ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், உள்ளாட்சிகள் தினம் போன்ற நாட்களில், கிராம சபை கூட்டம் நடத்தபபடுகிறது.  இதைத்தொடர்ந்து முதல் தேதி  நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வரவு செலவு கணக்கு நீலகிரி மாவட்டத்தில் நாளை காலை 11:00 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்த கூடாது. கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இடம், நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட வரவு-செலவு அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
தூய்மையான குடிநீர் வினியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு, கட்டட அனுமதி, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும்.
எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

