/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துண்டிக்கப்படும் மின்சாரம் பாதிக்கப்படும் உள்ளூர் மக்கள்
/
துண்டிக்கப்படும் மின்சாரம் பாதிக்கப்படும் உள்ளூர் மக்கள்
துண்டிக்கப்படும் மின்சாரம் பாதிக்கப்படும் உள்ளூர் மக்கள்
துண்டிக்கப்படும் மின்சாரம் பாதிக்கப்படும் உள்ளூர் மக்கள்
ADDED : ஏப் 03, 2025 08:33 PM

பந்தலுார்:
பந்தலுார் மற்றும் உப்பட்டி பகுதிகளில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின் சப்ளையால் பொதுமக்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பந்தலுார் மற்றும் உப்பட்டி பகுதிகளுக்கு உட்பட்டி, துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சப்ளை துண்டிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்படுவதால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தற்போது அரசு பொது தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் மின் சப்ளை துண்டிக்கப்படுவதால், வாக்கிங் செல்லும் பெரும்பாலான மக்கள் எதிரே வன விலங்குகள் வருவது கூட தெரியாத நிலையில் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் கூறுகையில்,'மழை காலம் துவங்குவதற்குள் மின் பாதைகளை சீரமைக்கவும், மின் சப்ளை துண்டிப்பை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.