/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யானைகள் அச்சத்தில் உள்ளூர் மக்கள்
/
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யானைகள் அச்சத்தில் உள்ளூர் மக்கள்
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யானைகள் அச்சத்தில் உள்ளூர் மக்கள்
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யானைகள் அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : செப் 22, 2024 11:35 PM

பந்தலுார் : பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று காலை, யானைகள் முகாமிட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
பந்தலுார் அருகே தேவகிரி, ரிச் மவுண்ட், எலியாஸ் கடை, ஏலமன்னா உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், ரிச் மவுன்ட் பகுதியில் முகாமிட்டிருந்த, 7 யானைகள், நேற்று காலை பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, இன்கோ நகர் மற்றும் இந்திராநகர் கிராமங்களை ஒட்டிய புதரில் முகாமிட்டன.
காலையில் 'வாக்கிங்' சென்றவர்கள் சாலையோர புதர் பகுதியில், யானைகள் நின்றிருப்பதை பார்த்து அச்சத்துடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான, வனக்குழுவினர், அப்பகுதிக்கு வந்து யானைகளை அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக, வனப்பகுதிக்குள் விரட்டினர். குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டதால் புதர் பகுதியில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே நின்றிருந்தது. வனக்குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதி வழியாக இரவில் மக்கள் நடமாட வேண்டாம்; யானைகள் சாலையோரம் வந்தால் பாதிப்பு ஏற்படும்.
இரு சக்கர வாகனங்களில் வருபவர்களும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.