/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்களின் கூட்டம்
/
கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்களின் கூட்டம்
கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்களின் கூட்டம்
கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்களின் கூட்டம்
ADDED : ஜூன் 29, 2025 10:56 PM

கோத்தகிரி; கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. பூங்காவில் ஆண்டுதோறும், கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் பராமரித்து வரும், இப்பூங்கா, நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.
பூங்காவின் ஒரு பகுதியில், சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாட ஏதுவாக, பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காலை முதல் பெற்றோருடன், பள்ளி சிறுவர் சிறுமியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதமான காலநிலையில், விளையாடி மகிழ்ந்தனர்.