/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கன்டோன்மென்ட் வாரியத்தை புறக்கணிக்கும் அரசு: அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
/
கன்டோன்மென்ட் வாரியத்தை புறக்கணிக்கும் அரசு: அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
கன்டோன்மென்ட் வாரியத்தை புறக்கணிக்கும் அரசு: அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
கன்டோன்மென்ட் வாரியத்தை புறக்கணிக்கும் அரசு: அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
ADDED : ஜூன் 27, 2025 08:53 PM
குன்னுார்:
குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், உள்ள, 7 வார்டுகளில், 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கிராம சபை கூட்டங்கள், மக்கள் குறைதீர் கூட்டம் போன்றவை முறையாக நடத்தப்படுவதில்லை.
மத்திய மாநில அரசு வழங்கும், பசுமை வீடு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் மாநில அரசின் தொகுப்பு வீடு திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் ஆகியவை இங்கு நடைமுறையில் இல்லை.
இந்நிலையில், கிராமப்புற அல்லது நகர்ப்புற அமைப்பிற்கு ஏற்ற சலுகைகளை இங்கு வழங்ககோரி, குன்னுாரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டரிடம் மனு வழங்கிய, கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் கூறுகையில், ''கடந்த, 5 ஜமாபந்தி, வருவாய் தீர்வாயத்தில் இது தொடர்பாக மனுக்கள் வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை,'' என்றார்.
இதே போல, 'வெலிங்டன் சானிடோரியம் முதல் சின்ன வண்டிச்சோலை வரை மழை நீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும்; அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் கால்வாய், அமைத்து, சின்னவண்டிசோலை கிராமத்திற்கு பாதிப்பு வராத வகையில் தடுக்க வேண்டும்; கூர்கா கேம்பில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு அரசு கட்டடம் கட்டி தர வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தினர். 'இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் குறை தீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் லட்சுமி பவ்யா உறுதி அளித்து சென்றார்.

