/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூட்டப்பட்ட நுண்ணுயிர் உர மையம் தற்காலிக கடைகள் அமைக்க முடிவு
/
பூட்டப்பட்ட நுண்ணுயிர் உர மையம் தற்காலிக கடைகள் அமைக்க முடிவு
பூட்டப்பட்ட நுண்ணுயிர் உர மையம் தற்காலிக கடைகள் அமைக்க முடிவு
பூட்டப்பட்ட நுண்ணுயிர் உர மையம் தற்காலிக கடைகள் அமைக்க முடிவு
ADDED : டிச 23, 2024 05:30 AM

குன்னுார்: குன்னுாரில் பூட்டப்பட்ட நுண்ணுயிர் உர மையத்தில், நகராட்சிக்கான தற்காலிக கடைகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சி சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உழவர் சந்தை அருகே, 89.22 லட்சம் ரூபாய் மதிப்பில் நுண்ணுயிர் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டது.
நகராட்சி, 30 வார்டுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மட்கும் கழிவு பொருட்களில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்த நிதியை வீணடிக்கும் வகையில், மையத்தை ரத்துசெய்து பூட்டப்பட்டது. இதனால், இந்த மையம் பயனில்லாமல் இருந்தது.தற்போது, குன்னுார் மார்க்கெட் நகராட்சி கடைகள்இடித்து, 41.50 கோடிரூபாய் முதலீட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிக கடைகளை இந்த மையத்திற்கு மாற்ற ஏற்கனவே நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தெரிவித்திருந்தார்.
இதற்காக, தற்போது இந்த கட்டடத்தின் உட்பகுதியில் இருந்த சிமென்ட் சிலாப்கள் உடைக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

