தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பூட்டி கிடக்கும் அலுவலகம் மக்கள் பாதிக்கும் அவலம்

பூட்டி கிடக்கும் அலுவலகம் மக்கள் பாதிக்கும் அவலம்

பூட்டி கிடக்கும் அலுவலகம் மக்கள் பாதிக்கும் அவலம்


UPDATED : அக் 07, 2026 03:39 PM

ADDED : அக் 07, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 03:39 PM ADDED : அக் 07, 2026 02:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறையில் பூட்டி கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறந்து செயல்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுார் புளியம்பாறை கிராமத்தின், ஒரு பகுதி நெல்லியாளம் நகராட்சியிலும், மற்றொரு பகுதி தேவர்சோலை பேரூராட்சி பகுதியிலும் அமைந்துள்ளது. இப்பகுதி பாடந்துறை வருவாய் வருவாய் கிராமத்தில் உள்ளதால் கிராம மக்கள், வருவாய் தொடர்பான பணிகளுக்கு, கூடலுார் அல்லது பாடந்துறை சென்று கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து வந்தனர்.

சிரமத்தை தவிர்க்க, புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, தனி கட்டடத்தில் வி.ஏ.ஓ., முகாம் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக, பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், கிராம மக்கள் கூடலுார் அல்லது பாடந்துறை சென்று வி.ஏ.ஓ.,வை சந்திக்க வருகின்றனர். இதனால், ஏற்பட்டுள்ள சிரமத்தை தவிர்க்க, இங்குள்ள முகாம் அலுவலகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

சமூக ஆர்வலர் சந்திரன் கூறுகையில்,''இங்கு, செயல்பட்டு வந்த வி.ஏ.ஓ., முகாம் அலுவலகம், பூட்டி கிடப்பதால், கிராம மக்கள் தங்கள் பணிகளுக்காக, நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us