ADDED : ஜன 31, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் மலைப்பாதையில் மர லோடு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர் அருகே எப்பநாடு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மரலோடு ஏற்றிக்கொண்டு லாரி மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் சிவா என்பவர் ஓட்டி சென்றார். குன்னுார் -மேட்டுப்பாளையம் சாலை, 9வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைவே பேட்ரோல் போலீசார் நடவடிக்கை எடுத்து மீட்க ஏற்பாடுகள் செய்தனர். ஒரு வழியில் வாகனங்கள் சென்றன. நேற்று காலை போக்குவரத்து முழுமையாக சீரானது.

