/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைப்பாதை வளைவில் கவிழ்ந்த லாரி; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
மலைப்பாதை வளைவில் கவிழ்ந்த லாரி; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மலைப்பாதை வளைவில் கவிழ்ந்த லாரி; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மலைப்பாதை வளைவில் கவிழ்ந்த லாரி; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 05, 2025 10:56 PM

குன்னூர்: குன்னூர் -- மேட்டுப்பாளையம் மலை பாதையில், 12 சக்கர லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியில் இருந்து, மேட்டுப்பாளையத்திற்கு நேற்று முன்தினம் இரவு, 12 சக்கர லாரியில் யூகலிப்டஸ் மரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்த லாரி, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், இரவு 11:30 மணியளவில், 6 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, கூடுதல் பாரத்தால் லாரியின் பின்பக்கம் கழன்று மர லோடு சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் வரவழைத்து மீட்பு பணி நடந்தது.
அதிகாலை, 5:00 மணியளவில் லாரி அகற்றப்பட்டது. இரவு நேரத்தில் குன்னூர் -- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
குன்னூர் கூடுதல் கலெக்டர் சங்கீதா நேரில் ஆய்வு செய்து, கூடுதல் பாரத்துடன் சென்றது மற்றும் 12 சக்கர லாரி அனுமதித்தது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.