ADDED : ஏப் 26, 2026 05:06 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் விலை உயர்ந்த மொபைல் போனை தொலைத்தவரிடம் ஒப்படைத்தவருக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
கோத்தகிரி ராம்சந்த் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய மொபைல் போனை தொலைத்துள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கோத்தகிரி போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த வழியாக சென்ற பேரகணி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சாலையில் கிடந்த மொபைல் போனை எடுத்து. அதை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு, எஸ்.ஐ., பிரசாந்த் ஆகியோர், சவுந்தர்ராஜனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, மொபைல் போனை ஒப்படைத்தனர்.
விலை உயர்ந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதை நேர்மையாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சண்முகத்திற்கு போலீசார் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
