/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாழ்வான இடத்தில் எரிவாயு மயானம்; சுற்றுப்புற குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு
/
தாழ்வான இடத்தில் எரிவாயு மயானம்; சுற்றுப்புற குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு
தாழ்வான இடத்தில் எரிவாயு மயானம்; சுற்றுப்புற குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு
தாழ்வான இடத்தில் எரிவாயு மயானம்; சுற்றுப்புற குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு
ADDED : நவ 08, 2024 10:41 PM
குன்னுார் ; குன்னுாரில் தாழ்வான பகுதியில் உள்ள எரிவாயு மயானத்தால் குழந்தைகள், உட்பட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் - ஊட்டி சாலையோரத்தில் வெலிங்டன் எரிவாயு மயானம், கடந்த, 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சாலையின் தாழ்வான இடத்தில் உள்ள இம்மயானத்தில் உடல்களை எரியூட்டும் போது, எதிரே உயரமான இடங்களில் உள்ள மவுன்ட் பிளசன்ட், குடியிருப்புகள், ஸ்ரீசற்குரு உயர்நிலைப்பள்ளி, புல்மோர் பள்ளி, சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவியர் விடுதிகள், நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மவுன்ட் பிளசன்ட் குடியிருப்போர் நல சங்க தலைவர் கணேசன் கூறுகையில், ''ஊட்டி சாலையோரத்தில் உள்ள இந்த மயானத்தில், ஒரு சில நாட்களில், 2 அல்லது 3 உடல்கள் எரியூட்டப்படுகிறது.
தினமும் எழும் நச்சுப்புகையால், இப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி குழந்தைகள், மாணவியர் விடுதிகளில் தங்கி படிப்பவர்கள், குடியிருப்புவாசிகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த மயானத்தை, மின் மயானமாக மாற்றி அமைக்க நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகிறோம். எனினும், தீர்வு கிடைக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மயானத்தை மாற்றுவதுடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைக்க கோரி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.