/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட்டில் மலை காய்கறி வரத்து குறைவு; விலை உயர்வால் பாதிப்பு
/
மார்க்கெட்டில் மலை காய்கறி வரத்து குறைவு; விலை உயர்வால் பாதிப்பு
மார்க்கெட்டில் மலை காய்கறி வரத்து குறைவு; விலை உயர்வால் பாதிப்பு
மார்க்கெட்டில் மலை காய்கறி வரத்து குறைவு; விலை உயர்வால் பாதிப்பு
ADDED : டிச 17, 2024 09:43 PM

ஊட்டி; ஊட்டியில் வரத்து குறைந்து வரும் நிலையில், மலை காய்கறிகளுக்கான விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உருளை கிழங்கு, பீட்ரூட்,கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் ஊட்டி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து மலை காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மலை காய்கறி வரத்து நாள்தோறும் சராசரியாக தினமும், 40 டன் அளவுக்கு ஊட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால் சராசரியாக, 20 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
விலை பட்டியல்: ஊட்டி மார்க்கெட் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு, 60 ரூபாய்; கேரட், 50; பீட்ரூட் , 60; நுால்கோல்,40; ஊட்டி பட்டாணி,130; பூண்டு, 400 ரூபாய்,' என, அனைத்து வகை மலை காய்கறிகளுக்கு சராசரியாக விலை அதிகரித்து உள்ளது. கடந்த சில வாரங்களாக மலை காய்கறிகளுக்கான விலை குறையாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வியாபாரிகள் கூறுகையில்,'ஊட்டி மார்க்கெட்டுக்கு தற்போது சராசரியாக, 15 முதல் 20 டன் அளவுக்கு மட்டுமே மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது படிப்படியாக வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,' என்றனர்.