/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்ச மழை பதிவு
/
கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்ச மழை பதிவு
ADDED : அக் 21, 2024 11:12 PM
கோத்தகிரி : கீழ் கோத்தகிரியில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால், முக்கிய நீர் ஆதாரங்களில் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், வறட்சி நாட்களில் போதிய தண்ணீர் இருப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.
தவிர, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில், ஈரத்தன்மை அதிகரித்து, போதிய மகசூல் கிடைத்து வருகிறது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, கீழ் கோத்தகிரியில் அதிகப்பட்சமாக, 32 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.