ADDED : செப் 25, 2026 05:12 PM
பாலக்காடு: பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று நடந்தது.
கட்சியின் தேசிய செயலாளர் பேபி பேசியதாவது:
கேரளத்தின் வளர்ச்சியை முடக்கும் சக்திகளுக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்படுகிறது. ரயில்வே கோட்டத்தைப் பிரிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை, மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.
டில்லியில் உள்ள ரயில் பவன் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்காமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட கூட்டாமல் அரசு அலட்சியம் காட்டுகிறது. மக்கள் நலன் கருதி இந்தப் போராட்டத்தை மா. கம்யூ. கட்சி கையில் எடுத்து முன்னெடுத்து செல்லும்.
தேர்தல் ஆணையத்திற்குள் நடக்கும் பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் போன்றவர்களின் பெயர் கூட வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், 47 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, அங்குள்ள வெற்றி வித்தியாசத்தை விட அதிகம்.
இவ்வாறு, பேசினார்.
