/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மடித்தொரை -- மேல் கம்பட்டி சாலை பணி; விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்
/
மடித்தொரை -- மேல் கம்பட்டி சாலை பணி; விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்
மடித்தொரை -- மேல் கம்பட்டி சாலை பணி; விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்
மடித்தொரை -- மேல் கம்பட்டி சாலை பணி; விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2025 08:55 PM
கோத்தகிரி; ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட, மடித்தொரை -மேல் கம்பட்டி இடையே, பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளதால், இவ்விரு கிராம மக்கள், 10 கி.மீ., தொலைவை கடந்து சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இவ்விரு கிராம மக்கள், சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஜல்லி கற்கள் பதிக்கப்பட்டதோடு, பணி முழுமை பெறாமலும், குறிப்பாக, ஊண்டிக்காடு பகுதியில் பாலம் அமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இச்சாலை, முழுமையாக சீரமைக்கப்படும் பட்சத்தில், 10 நிமிடங்களில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இது தொடர்பாக, கிராம துணைத் தலைவர் பாபு சுந்தர்ராஜ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'இந்த கிராம மக்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, சாலை வசதி இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சாலை பணி நிறைவடையும் பட்சத்தில், குறிப்பாக விவசாயிகள் பயன் பெறுவர். எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறியுள்ளார்.