sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோத்தகிரி ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

/

கோத்தகிரி ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கோத்தகிரி ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கோத்தகிரி ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்


ADDED : பிப் 03, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவை ஒட்டி, 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு மங்கள இசை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனம், சங்கல்பம், ஆச்சார்ய வரணம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு முதல் கால பூஜை, கும்ப அலங்கார கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனன், சோமகும்ப பூஜை, அக்னி கிரியை, மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி தேவப்பாராயணம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இரவு, 8:30 மணி முதல், 9:30 மணி வரை, விக்ரஹ பிரதிஷ்டை நடந்தது. 31ம் தேதி காலை, 6:00 இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நிகழ்ச்சியை அடுத்து, காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை, மீன லக்கனத்தில், சாக்த ஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமி தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மகா தீபாராதனை, மகா அபிஷேகம், சர்வ அலங்காரம் பூஜையை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பகல், 12:30 மணி முதல் அன்னதானம் நடந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us