/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
/
செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 01, 2025 11:23 PM
ஊட்டி; காந்தள் ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஊட்டி அருகே காந்தள் பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் பொலிவுபடுத்தப்பட்டன. மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த, 27ஆம் தேதி காலை,9:30 மணிக்கு முளைப்பாரி கலசம் ஊர்வலம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
29ம் தேதி, 7:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா லக் ஷ்மி ஹோமம், நவகிரஹ ஷோமம் மற்றும் தீபாரதனை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை நடந்தது.
30ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜைகளை தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை நடராஜர் சுவாமிகள் தலைமையில், சரவணன், சிவக்குமார் மற்றும் பலர் நடத்தி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது.