/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ சீதா ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ சீதா ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 25, 2024 11:07 PM
கோத்தகிரி;கோத்தகிரி கலிங்கனட்டி ஜெய் ஸ்ரீ சீதா ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 23ம் தேதி, மாலை 4:30 மணிக்கு, தீர்த்த புறபாடு, கோமாதா பூஜை, நவதானியம், ஆலயமணியுடன், சீதாராமன் உற்சவமூர்த்தியை கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 6:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேச பலி பூஜை, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. சனிக்கிழமை (24ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜை, காலை, 5:00 மணிக்கு, நாடி சந்தானம் 5:30 மணிக்கு, பூர்ணாஹுதி பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 5:45 மணிக்கு மேல், கும்பாபிேஷக விழா நடந்தது.
காலை, 6:30 மணிக்கு, அபிஷேக சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
25ம் தேதி (ஞாயிறு) காலை, 9:00 மணிக்கு, தேர் அலங்காரத்தை தொடர்ந்து, 11:00 மணிக்கு, ஸ்ரீ சீதா ராமபிரான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. மாலை, 4:00 மணிக்கு, மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.

