/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுப்ரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார் கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா
/
சுப்ரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார் கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா
சுப்ரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார் கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா
சுப்ரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார் கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 31, 2025 11:22 PM

ஊட்டி; ஊட்டி லோயர் பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில்களில், மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வரும், அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று காலை, 7:00 மணி முதல் 7:25 மணிக்குள் மகர லக்கனத்தில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் அனைத்து பரிவாரம் மூலமூர்த்திகளுக்கு, மகா அபிஷேக அலங்காரம், தசதரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:35 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமியின் திருவீதி உலா நடந்தது.
* இரட்டை பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, புஷ்பாண்ட பூஜை, மகாகணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவக்கோள் யாகம், மக தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 5:00 மணி முதல், விநாயகர் வழிபாடுடன், ரக்ஷா பந்தனன், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதற்கால யாகவேள்வி, மூல மந்திர யாகம், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, நேற்று காலை, 9:20 மணிக்கு, கடங்கள் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியை அடுத்து, 9:30 மணிக்கு, கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையை அடுத்து, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, திருவீதி உலா நடந்தது. கும்பாபிேஷக வழிபாடுகளை, தலைமை அர்ச்சகர் சரவண குருக்கள், ஆலய அர்ச்சகர் லட்சுமி நாராயணன் உட்பட சில குருக்கள் நடத்தினர்.
ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ஜெகநாதன், தக்கார் கைலாசமூர்த்தி, ஆய்வாளர் ேஹமலதா உட்பட பலர் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.