/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகா லிங்கேஸ்வர் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மகா லிங்கேஸ்வர் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகா லிங்கேஸ்வர் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகா லிங்கேஸ்வர் கோவில் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 09, 2025 09:35 PM

குன்னூர்; குன்னூரில் சுயம்பு மகா லிங்கேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது.
குன்னூர் - கோத்தகிரி சாலையில், ஆழ்வார்பேட்டை முடியக்கி பகுதியில் படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான மகா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், ஜூன் மாதம், திங்கள் கிழமையில் ஒரு நாள் மட்டும், கோவில் திறக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணியளவில் நிறைவு பெற்றது.
முன்னதாக, கோடமலை கிராமத்தில் இருந்து, அதிகாலை 5:00 மணிக்கு மக்கள், பூஜை பொருட்களுடன் நடை பயணமாக கோவிலுக்கு வந்தனர்.
கோவிலில், நெய் விளக்கேற்றி, அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
விழாவில், கிராம மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் திரளாக பங்கேற்றனர். குறிப்பாக, படுகரின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பங்கேற்று வழிபட்டனர்.
இந்த விழாவை தொடர்ந்து, படுகரின கிராமங்களில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.