/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி; தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரம்
/
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி; தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரம்
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி; தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரம்
நேரு பூங்காவில் பராமரிப்பு பணி; தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரம்
ADDED : அக் 13, 2024 09:56 PM

கோத்தகிரி : கோத்தகிரி நேரு பூங்காவில், பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி நகரின், மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, ஆண்டுதோறும் இங்கு, காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
பூங்கா நுழைவு வாயில், நடைபாதை, புல்தரை, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. தவிர, பல்வேறு வண்ணங்களில், பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பூத்து குலுங்குகின்றன. கோடை விழா உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டத்தில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, மழை பெய்து, புல் தரை வளர்ந்து, பசுமையாக காட்சி அளிக்கிறது.
இதனால், பூங்காவை மேலும், சிறப்பாக பராமரிக்கும் பொருட்டு, வளர்ந்துள்ள புற்கள் நேர்த்தியாக வெட்டப்படுவதுடன், மரங்களில் இருந்து உதிர்ந்த இலை சருகுகளை அகற்றும் பணியில், பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.