/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காய்கறி கண்காட்சிக்காக பராமரிப்பு பணி; கோத்தகிரி நேரு பூங்கா மூடல்
/
காய்கறி கண்காட்சிக்காக பராமரிப்பு பணி; கோத்தகிரி நேரு பூங்கா மூடல்
காய்கறி கண்காட்சிக்காக பராமரிப்பு பணி; கோத்தகிரி நேரு பூங்கா மூடல்
காய்கறி கண்காட்சிக்காக பராமரிப்பு பணி; கோத்தகிரி நேரு பூங்கா மூடல்
ADDED : ஏப் 14, 2025 09:44 PM

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சிக்காக, பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. ஆண்டுதோறும், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, இங்கு காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. நடுப்பாண்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகையை அதிகரிக்க ஏதுவாக, பூங்கா நிர்வாகம், தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, பூங்காவில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்ரக மலர் நாற்றுகள் நடவு செய்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூங்கா புல்தரை, நடைப்பாதை சிறப்பாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
மலர் நாற்றுகள் மற்றும் புல்தரை பாதிக்காத வகையில், பூங்கா நுழைவு வாயில் மூடப்பட்டு பணி நடந்து வருகிறது.
காய்கறி கண்காட்சிக்கு முன்பாக, மலர்கள் பூத்து குலுங்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வரும் நாட்களில், பொலிவுப்படுத்தும் பணிகள், நிறைவடையும் பச்சத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக, பூங்கா திறக்கப்பட உள்ளது.
பூங்கா நிர்வாகிகள் கூறுகையில்,' அடுத்த மாதம் துவங்கும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சி இந்த பூங்காவில் நடக்க உள்ளதால், சிறப்பாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. பல வண்ண மலர்களின் நாற்று நடும் பணி முடிந்து விட்டது. பராமரிப்பு பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக பூங்கா மூடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தால் விரைவில் பூங்கா திறக்கப்படும். இதற்கு உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.