/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனமழை ஓய்ந்ததை அடுத்து நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
/
கனமழை ஓய்ந்ததை அடுத்து நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
கனமழை ஓய்ந்ததை அடுத்து நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
கனமழை ஓய்ந்ததை அடுத்து நேரு பூங்காவில் பராமரிப்பு பணி
ADDED : டிச 20, 2024 08:01 PM

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் மழை ஓய்ந்ததை அடுத்து, பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா, உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு தலமாக அமைந்துள்ளது. பள்ளி விடுமுறை நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, பூங்காவில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் நிர்வகித்து வரும் இப்பூங்காவில் மலர் நாற்றுகளுடன், புல் தரை, நடைபாதை, இருக்கைள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, தொடர்மழை மற்றும் காற்று காரணமாக, மரங்களில் இருந்து புல்வெளியில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில், பூங்கா ஊழியர்கள், இலை, சருகுகளை அகற்றி, புல் தரையை நேர்த்தியாக வெட்டி, பூங்கா பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இனிவரும் நாட்களில், பட்டுப்போன மலர் செடிகள் அகற்றப்பட்டு, பல்வேறு மலர் நாற்றுகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.