/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகரின் மையப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு; சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

ADDED : மே 05, 2025 10:13 PM

ஊட்டி; ஊட்டி நகரின் மைய பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடால் சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன்பு பொருத்தப்பட்ட குழாய்கள் என்பதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டும், கழிவு அடைப்பால் மழை சமயங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.
அதே வேளையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நகரில் முக்கிய சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா அந்தஸ்து பெற்ற ஊட்டியில் கோடை சீசன் துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டியின் மைய பகுதியான மார்க்கெட் எதிரே லோயர் பஜார், ஏ.டி.சி., சாலையை இணைக்கும் சாலையில் கழிவு நீரால் சேறும், சகதியும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் இது போன்ற அவல நிலையால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''ஊட்டி நகரில் கழிவுநீர் வெளியேறும் இடங்களை அடையாளம் கண்டு சீரமைத்து வருகிறோம். மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,''என்றார்.