/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேஷன் புரூட்டில் பழரசம் தயாரிப்பு
/
பேஷன் புரூட்டில் பழரசம் தயாரிப்பு
ADDED : ஜூலை 08, 2025 08:34 PM

குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே பழ பதனிடும் நிலையத்தில் ஒரு டன் பேஷன் புரூட்டில், பழரசம் தயாரிக்கும் பணிகள் துவங்கியது.
குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே பழம் பதனிடும் நிலையத்தில் பல்வேறு பழங்களின் ஜாம், ஊறுகாய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 'தாட்பூட்' என அழைக்கப்படும் பேஷன் புரூட் சீசன் களைகட்டியுள்ளதால், குன்னுார் தோட்டக்கலை பண்ணை உட்பட  மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பழங்கள் விளைந்துள்ளன. இவை,  சிம்ஸ்பூங்கா அருகே உள்ள பழம் பதனிடும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது இங்கு, பேஷன் புரூட் பழரசம் தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
நிலைய மேலாளர் ஹரி கூறுகையில்,''பேஷன் புரூட், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கிறது. பேஷன் பழம் மற்றும் அதன் சாறு, செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. 700 கிராம் அடங்கிய பேஷன் புரூட் பழரச பாட்டில், 180 ரூபாய்க்கு தோட்டக்கலை மையங்களில், விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.

